நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நடைமுறை, செவ்வாய்க்கிழமை (17) முதல் இரண்டு வாரங்களுக்கு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைக் கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில், கடந்த (14) சனிக்கிழமை முதல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.