ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை (14.03.2020) நெலும் மாவத்தை யில் அமைந்துள்ள கட்சியின் உத்தியோகபூர்வ கார்யாலயத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.
இது பற்றி அவரது அலுவலக ஊடகப் பிரிவு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கும் போது;
கண்டி பெரும் தலைவர்கள் உருவான மாவட்டம். ஆனால் இப்போது பொறுப்பாளர் அற்ற மாவட்டமாக மாறியிருக்கிறது.
அப்பெரும் நோக்கத்தை நிறைவேற்றிடவும் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் நோக்கிலும் பொதுஜன முன்னணி ஊடாக 2020 பாராளுமன்ற தேர்தலில் பிரபல தொழிலதிபர் திரு ஏ.எல்.எம்.பாரிஸ் அவர்கள் களம் இறங்கியிருக்கிறார் .
கண்டி மாவட்டத்தில் அவர்கள் வெற்றி பெறவேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். காரணம் அவர் ஆளும் கட்சியில் போட்டியிடும் ஒரு முக்கிய முஸ்லிம் வேட்பாளர்.
அவருக்கு வேட்புமனு வழங்கப்படாது. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அவர் வெற்றி பெறவும் முடியாது என்று பல்வேறு குற்றச் சாட்டுக்கள்மற்றும் கட்டுக் கதைகளை பரப்பி அரசியல் இலாபம் தேடினார்கள் எமது எதிர்கட்சியினர்.
இவ்வாறான கட்டுக் கதைகளுக்கும்இ சுயநலவாத கருத்துக்களுக்கும் தனது நடைமுறையாலும் திறமையினாலும் பதில் சொல்லும் படியாக இன்று வேட்புமனுவில் ஒப்பமிட்டார் திரு ஏ.எல்.எம் பாரிஸ் அவர்கள்.
இந்த வெற்றி எப்படி கிடைத்ததோ அதே போன்று தேர்தலிலும் அவர் அபாரா வெற்றியீட்டுவார் என அவர் தெரிவித்தார்.