ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த சஹன பியவர சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தினூடாக ஓட்டமாவடி சமுர்த்தி வங்கியினால் ஓட்டமாவடி - 1, 208 பீ கிராமசேவகர் பிரிவு மக்களுக்கு இன்று (31) கடன் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொழிலின்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் வீடுவீடாக சென்று இவ் உதவித்திட்டத்தை வழங்கி வருகிறது.
பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கடன் உதவியினை வழங்கும் இத் திட்டத்தில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எம். மஜீத், முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.ரீ.எம். ருமைஸ், வங்கி முகாமையாளர் ரீ.எம் . சிஹான், ஓட்டமாவடி 208 பீ பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.பீ.எம். அப்பாஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கே.எம். சர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.