UKயில் புதிதாக பிறந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
UKயில் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபராக அக் குழந்தை கருதப்படுகிறது. அந்தக் குழந்தைக்கு லண்டனிலுள்ள ஒரு வைத்தியசாலையில் அதி தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலில் அக் குழந்தையின் தாய் நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக வைத்தியர்கள் சந்தேகித்தனர். ஆனால் நோர்த் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் ( North Middlesex University Hospital ) அவர் பரிசோதிக்கப்பட்டார். ஆனால் அவர் குழந்தை பெற்றெடுத்த பிறகே தான், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான பரிசோதனை முடிவுகள் வைத்தியர்களுக்கு கிடைத்தது.
இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் குழந்தையையும் வைத்தியர்கள் பரிசோதித்தனர். குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தற்போது தாயும் சேயும் வெவ்வேறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிறப்பின்போது தாயின் பிறப்புறுப்பு மூலமாக குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா அல்லது தாயின் வயிற்றிலிருந்தபோது குழந்தைக்கு கொரோனா தொற்று பரவியதா என வைத்தியர்கள் பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.