சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் 1,000 சடலப் பைகள் தொடர்பில் விளக்கம்

டலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் 1,000 சடலப் பைகளை (Body Bags) பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை சுகாதார நடைமுறையே அன்றி, அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் குறித்த விடயம் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கை வேலைத் திட்டங்களுக்கு அமைய, அவ்வாறான துரதிஷ்டவசமான நிலை ஒருபோதும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகளை செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து (ICRC) பெற்றுக்கொள்வற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அனுப்பப்பட்ட கடிதமொன்று தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கதைகள் மற்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில், இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது எனவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது குறைவாகக் காணப்படுகின்றது. தற்போது வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டமாக அடையாளம் காணப்பட்டவர்களால் வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக, அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவினால் மருந்து வகைகள், உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொழில்நுட்ப அவசியமாகும் என்பதோடு, அவற்றை குறிப்பிட்ட அளவில் பேணும் நோக்கில் செஞ்சிலுவை சங்கத்திடம் சடலப் பைகளை பெற்றுக்கொள்வற்கு கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அதற்கான நடவடிக்கையே இதன்போது இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும் கொவிட்-19 போதான மரணங்களில் மாத்திரமன்றி, பல்வேறு விடேச நிலைமைகள் மற்றும் அனர்த்த நிலைமைகளில் சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக சடலப் பைகள் பயன்படுத்தப்படுவது புதிதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போதும் மரணமடைந்தவர்களின் சடலங்களை இவ்வாறு சடலப் பைகளில் இட்டே அடக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பில் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -