கொரோனா எதிரொழி 12 ஆயிரம் பணியாளர்களை இடைநிறுத்தும் விமான நிறுவனம்..!


கொரோனா வைரசால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் 31 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுளதால் பெரும்பாளான ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனமும் கொரோனா காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது சேவையை மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வரும் அந்நிறுவனம் நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேசின் தலைமை நிறுவனமான சர்வதேச விமான போக்குவரத்து குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பிரிட்டிஷ் ஏர்வேசில் வேலை செய்துவந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -