அட்டன் நகரத்தில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை




க.கிஷாந்தன்-

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் அட்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி அட்டன் நீதிமன்றத்தில் வழங்கு தொடுக்கப்படவுள்ளது.

தண்டனை சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே அட்டன் - டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அட்டன் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொதுசுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். இதன்போதே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் என கடந்த 24 ஆம் திகதி வர்த்தகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலானவர்கள் அவற்றை மீறும் வகையில் செயற்படுவதை காணமுடிகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -