கிழக்கு மாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களுள் அண்மையில் வெளியான க.பொ.த. சா.தரப்பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் கல்முனை வலயம் முதலிடத்தைப்பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.
எமது வலயத்திலுள்ள 65பாடசாலைகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றின. அவர்களுள் 79.33வீதமான பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்குத் தகுதிபெற்றுள்ளனர்.
அதன்படி கிழக்குமாகாணத்தில் முதலிடத்தையும் அகிலஇலங்கைரீதியில் கடந்தவருடம் 14 ஆம் இடத்திலிருந்த நாம் இம்முறை12ஆம் இடத்தை அடைந்து இருபடி முன்னேறியுள்ளோம்.
77.69வீதத்தினைப்பெற்ற அக்கரைப்பற்றுவலயம் இரண்டாமிடத்தினையும் 75.57வீதத்தினைப்பெற்ற தெஹியத்தக்கண்டிய வலயம் 3ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.
இச்சாதனைக்காக உழைத்த முன்னாள்வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கல்விசார் உத்தியோகத்தர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.
சம்மாந்துறை வலயம் 10 இடங்கள் முன்னேறி ..
க.பொ.த (சா.த) -2019 பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் சம்மாந்துறை கல்வி வலயம் அகில இலங்கை மட்டத்தில் 83ஆம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் 12ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.
மேலும் கடந்த வருடத்தை விட தேசிய ரீதியில் 10 இடங்கள் முன்னேறி காணப்படுகிறது. மாகாண ரீதியில் கடந்த வருடத்தை விட 3இடங்கள் முன்னேறி காணப்படுகிறது
இப் பெறுபேற்றினை பெற்றுகொள்வதற்காக அல்லும் பகலும் உழைத்த மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்விசார் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது உளப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.