நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (16) காலை ஆறு மணியுடன் 19 மாவட்டங்களுக்கு 10 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து, மலையக நகரங்களில் காலை வேளையில் பேரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் படையெடுத்துள்ளனர்.
இவ்வாறு படையெடுத்துள்ள மக்கள் சில்லறை வர்த்தக நிலையங்கள், வங்கிகள், சத்தோச விற்பனை நிலையங்கள்,அடகு பிடிக்கும் இடங்கள்,கார்கீல்ஸ் புட்சிட்டி மரக்கறிகடைகள் என எல்ல இடங்களிலும் கூடியிருந்தனர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்த போதிலும் சமூக இடைவெளி பேணுவதனை அவதானிக்க முடியாதிருந்தன.
அரசாங்கம் அத்தியவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒரு வரை மாத்திரம் செல்லுமாறு ஊடகஙகள் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மிகவும் அசமந்த போக்கில் தமது குழந்மை குட்டிகளுடன் வருகை தந்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தன.
அத்தோடு அத்திவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும். சிகரட் விற்பனை நிலையத்தின் முன்னாள் நீண்ட கிவ்வரிசை காணப்பட்டன.மரக்கறி விலைகள் ஓரளவு நியாமான விலையில் காணப்பட்ட போதிலும் அத்தியவசிய பொருட்களின் விலை சில கடைகளில் குறித்த விலைக்கு அதிகமாகவே விற்கப்பட்டன.
பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் தோட்டங்களில் வேலை கிடைக்காததன் காரணமாக பெரும் எண்ணிக்கையானோர் தமது தங்க நகைகளை அடகு வைத்து பொருட்களை கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தன.
சத்தோச, கார்கீஸ், ஆகிய அத்தியவசிய விற்பனை நிலையங்கள் பல மீற்றர்கள் தூரத்திற்கு காணப்பட்டதுடன் வங்கிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டன.
இதே இன்றைய தினம் ஹடடன் பகுதியில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெற்ற போதிலும் மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் மிகக் குறைந்த அளவே காணப்பட்டன.
இதனால் பஸ்களில் மக்கள் அதிகமாக காணப்பட்டன.