எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கல்குடா கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் ஒன்பது கிராம சேகவர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 2027 குடும்பங்களுக்கு வாழைச்சேனை அந்;நூர் தேசிய பாடசாலையின்; மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
சமூக நிறுவனங்களின் கூட்டமைபின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கல்குடா ஜம்இய்யதுல் உலமா, ஸகாத் நிதியம், பிரதான பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள், உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஆகியவைகள் ஒன்றிணைந்து கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பினை உருவாக்கி கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.