ரூ. 2 கோடியே 24 இலட்சம் அக்கரைப்பற்றில் 4482 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 4482 குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் வீதம் 02 கோடியே 24 இலட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பதிலாளர்கள், வருமானத்தை இழந்துள்ள சிறு கைத்தொழிலாளர்கள், தொழிலை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அன்றாட தொழிலை இழந்துள்ள குடும்பங்கள் என பலர் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 28 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், கூறினார்.

கிராம மட்டக் குழுக்கள் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரால் இதற்கான தகவல் திரட்டப்பட்டதாகவும், இதனடிப்படையிலேயே இப் பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும், குறிப்பிட்டார்.

அத்தோடு, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 04 ஆயிரத்தி 307 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பெறுவதற்கு தகுதியான காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2980 குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -