கொரோனா தொற்று நாட்டில் பரவியதனை தொடர்ந்து பொருளாதார ரீதியில் தோட்ட மக்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
புதிக்ப்பட்ட ஒரு சிலருக்கு அரசாங்கமும் அரசார்பற்ற நிறுவனகளும் நிவாரணங்களை தந்துதவிய போதிலும் ஒரு சிலருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை இந்நிலையில் எவ்வித நிவாரணமும் கிடைக்காத மக்களுக்கு திகா உதயா நிவாரண திட்டம் மூலம் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய திகா - உதயா நிவாரணப் பணியின் கீழ் லிந்துலை - மட்டுக்கலை இலக்கம் 02 கொலனி, இலக்கம் 12 கொலனி மற்றும் கேனஸ் பிரிவுகளில் உள்ள வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 200 குடும்பங்கள் நன்மை அடைந்தன.
குறித்த தோட்டங்களில் எவ்வித நிவாரணம் உதவிகள் கிடைக்காத குடும்பங்களை தெரிவு செய்து திகா - உதயா நிவாரணப் பணியின் கீழ் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.