மருதமுனை அல்-மானார் மத்திய கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/தர) பரீட்சைப் பெறுபேறுகள்


காமிஸ் கலீஸ்-
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/தர) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நூற்றாண்டு கண்டுள்ள மருதமுனை அல்-மானார் மத்திய கல்லூரியின் பரீட்சைப் பெறுபேறுகள் கல்லூரியின் அதிபர் எம்.ஜே. அப்துல் ஹசீப் அவர்களினால் உத்தியோகபூர்வமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி பரீட்சையில் கல்லூரியிலிருந்து சித்தியடைந்துள்ள மாணவர்களுள் ஐவர் இப் பரீட்சியில் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளனர்.

அத்தோடு ஆறு மாணவர்கள் எட்டு பாடங்களில் A தர சித்தியினையும் மூன்று மாணவர்கள் 7பாடங்களில் A தர சித்தியினையும் நான்கு மாணவர்கள் ஆறு பாடங்களில் A தர சித்தியினையும் பெற்றுள்ளதாக அதிபரின் அறிக்கையின் பிரகாரம் அறியக்கிடைக்கின்றது.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ள இம் மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அவர்களை வழிநடாத்திய அதிபர், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் ஆகியோருக்கும் அம் மாணவர்களின் பெற்றோருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -