திகாமடுள்ள தேர்தல் மாவட்டம் 2020


பஹ்மி முகம்மட்-
கிழக்கு இலங்கையில் மட்டுமல்ல முழு நாட்டிலும் பரவலாக தேர்தல் காலங்களில் கவனத்தை ஈர்த்த பிரதேசம்.

புதிய ஜனாதிபதி, அத்தாவுள்ளா எழிர்ச்சி, UNP பிளவு, முஸ்லீம்கள் மீதான அழுத்தம், இனவாதம் மற்றும் சாய்ந்தமருது பிரதேசசபை மற்றும் தமிழ் பிரதேச செயலகம் ஆகிய பல சுவையான தகவல்களுடன் தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த முறை பொதுத் தேர்தலில்
1-SLPP
2-UNP
3-சஜித் அணி
4-ACMC
5-TNA
6-அத்தாவுள்ளா-தேசிய காங்கிரஸ்

ஆகிய பலமான அணிகள் களத்தில் இறங்கி உள்ளது.

2015 பொதுத் தேர்தல் முடிவுகள்.

UNP-151013 - 46.3%. -4 ஆசனம்
UFPA-89334 -27.39% -2 ஆசனம்
TNA -45421 -13.92% -1 ஆசனம்
ACMC-33102-10.15% - 0 ஆசனம்

2019 ஐனாதிபதி தேர்தல் முடிவுகள்

Sajith Premadasa -259,673
Gotabaya Rajapaksa- 135,058

Sajithகு அளிக்கப்பட்ட வாக்குகளில் ரணில் அணி+ ACMC+ TNA என சுமார் 150000கு அதிகமான வாக்குகள் இந்த 2020 தேர்தலில் குறைவடையலாம்.SLMC கட்சிக்கு சுமார் 50 ஆயிரம் வாக்குகள் இருந்தது. சாய்ந்தமருது வீழ்ச்சி மற்றும் பொத்துவில் மற்றும் நிந்தவூர் தளம்பல் நிலையால் 40 ஆயிரமாக வாக்கு வங்கி குறையலாம். சுமார் 30-40 ஆயிரம் வரையிலான சிங்கள வாக்குகளையே சஜித் அணி பெற்று 70-80ஆயிரம் வாக்குகளையே பெற முடியும்.

Gothapaya அணியைப் பொறுத்தவரையில் அத்தாவுள்ளா ஆதரவை தவிர்த்து எதுவித வாக்குகளின் தளம்பல் இல்லாமல் 90-110000 வாக்குகளைப் பெறலாம்.

மூன்றாவதாக கடந்த காலத்தில் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் தனியாக வைத்திருத்தது. இந்த முறை சாய்ந்தமருது எளிர்ச்சி, முன்னால் நகரபிதா மீராசாஹிப், சம்மாந்துறை தவிசாளர் நௌசாத் அதனது உறவினரான VC இஸ்மாயிலுக்கு ஆதரவளிப்பது ..தேசிய காங்கிரஸ் 40-50 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கு வரும்.

TNA பல தமிழ்கட்சிகள் போட்டியிடுவதால் வாக்கு வீழ்ச்சியுடன் சுமார் 40 ஆயிரம் வாக்குகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும்.

UNP -தனியாக சிங்கள வாக்குகளை மட்டுமே பெறமுடியும். இதனால் சுமார் 30 ஆயிரம் வாக்குகளுடன் ஐந்தாவது இடத்திற்கு வரலாம்.

ACMC பாரிய வாக்குச்்சரவை எதிர் கொள்ளும் .காரணம் கடந்த காலங்களில் கட்சியில் இருந்த மற்றும் போட்டியிட்ட
-VC இஸ்மாயில்
-மீராசாஹிப்
-நௌசாத்
-பொத்துவில் மஜீத்
-ஜெமீல்
-அன்வர் முஸ்தபா

போன்ற ஓரளவு வாக்கு வங்கிகளைக் கொண்டிருந்த எவரும் இந்த முறை ACMC ல் போட்டியிடவில்லை மற்றும் ACMC தலமையை விட்டும் ஓரமாகிவிட்டனர். இதனால் ACMC 20 ஆயிரம் வாக்குகளை எடுப்பதற்குக் கூட கடினமாக போராடவேண்டும்.அதன்படி ஆறாவது இடத்திற்கு நகர்த்தப்படும்.

அந்த தரவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெறுகின்ற ஆசனம்
1-SLPP-3
2-சஜித் அணி-2
3-அத்தாஅணி-1
4-TNA-1

கடந்த பொதுத் தேர்தலில் சுமார் 50% மான வாக்குகள் இடைவெளி முதல் இரண்டு கட்சிகளுக்கு இருந்ததால் ஆசனங்கள் 4:2 என பகிரப்பட்டது. இந்த முறை அதற்கான சந்தர்ப்பம் குறைவு என்பதால் முதல் இரண்டு கட்சிகளுக்கு விகிதாசாரப்படி 3:2என்றே ஆசனங்கள் பகிரப்படும்.

கடந்த காலங்களில் சுமார் 5 முஸ்லீம் உறுப்பினர்கள் இருந்தனர். இதில் 2 பிரதி அமைச்சர்கள் உள்ளடங்கியது. இந்த முறை சஜித் அணிக்குரிய 2 ஆசனங்களில் ஹரீஸுக்கு கல்முனை பலமான வங்கி உற்பட பரவலான வாக்கு வங்கி இருப்பதால் சந்தர்ப்பம் உள்ளது.

அடுத்ததாக அத்தாஉள்ளா வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.அந்த வகையில் முஸ்லீம் சமூகம் பிரதிநிதிகளை இழப்பதற்கான சந்தர்ப்பம் திகாமடுள்ள மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

ACMC + SLMCசஜித் அணியுடன் இணைந்து 3 வேட்பாளர்களை புரிந்துணர்வுடன் நிறுத்தி இருந்தால் ஓரளவு 2 முஸ்லீம் பிரதிநிதியை பெற்றிருக்கலாம்.

இந்த ஆய்வின் விபரமான கட்டுரை பின்னர் இணையத்தளத்தில் வெளியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -