சட்டவிரோதமாக 22 எருமை மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது


பாறுக் ஷிஹான்-

னுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இரு வேறு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாடுகளை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருந்து நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற சுமார் 13 எருமை மாடுகள் வெள்ளிக்கிழமை(24) அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது.

அதே நேரம் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் 9 எருமை மாடுகள் சவளக்கடை பகுதியிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மீட்கப்பட்டு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நடவடிக்கையானது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்
ரவூப்,ஜெயசுந்தர, திலேல்காந்த்,சுமனபால , பியந்த, ஆகியோர் மேற்கொண்டனர்.

அத்துடன் எருமை மாடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களையும் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -