கொரோனா : 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் 3176 பேர் உயிரிழப்பு..!


அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்க உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சர்வசேத அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,90,654-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்க உள்ளது. மேலும் அமெரிக்காவல் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்ட உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3176 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் 25,549 பேரும் ஸ்பெயின், பிரான்ஸ் முறையே 22,157 மற்றும் 21,856 பேர் உயிரிழந்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -