கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 7 062 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் புதிதாக 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 2804 ஆக பதிவானது. இதையடுத்து அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரமாக உள்ளது.
அங்கு கடந்த ஒருவாரத்தில் இறப்பு விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரமாக உள்ளது. இத்தாலியில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர், பிரான்ஸில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேரும், பிரிட்டனில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 6 ,90,226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், அதிகபட்சமாக ஜெர்மனியில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலமடைந்துள்ளனர்.