புனித நோன்பு 25ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பம்.
2020 ஹிஜ்ரி 1441 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (23) மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடரந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம் பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பிறைக்குழு தலைவர் அஷ்-ஷெய்க் அப்துல் ஹமீட் (பஹ்ஜி) உள்ளிட்ட பிறைக்குழு அங்கத்தவர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி உள்ளிட்ட ஜமிய்யதுல் உலமா சபையின் அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி மொஹமட் ஷாலிஹீன், பெரிய பள்ளிவாசலின் தலைவர் தௌபீக் ஹாஜியார் உள்ளிட்ட பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்கள், ஏனைய பள்ளிவாசல்களின் பிரதி நிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள், உலமாக்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிறை மாநாட்டுக்கு பிரதி நிதிகள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது இன்று நாட்டில் எப்பாகத்திலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் ஷஹ்பான் மாதத்தை நாளை வெள்ளிக்கிழமை 30ஆக பூர்த்தி செய்து நாளை மாலை வெள்ளிக்கிழமை பின்நேரம் சனிக்கழமை இரவு (25) புனித நோன்பை ஆரம்பிக்குமாறு பிறைக்குழு மாநாட்டில் ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டு இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே புனித நோன்மை சனிக்கிழமையில் இருந்து ஆரம்பித்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு அமைவாக சகல முஸ்லிம்களும் தமது ரமழான் மாத சமயக் கடமைகளை தத்தமது வீடுகளில் இருந்து அமைதியாக மேற்கொள்ளுமாறு பிறை மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டது.