மக்களின் அன்றாட நடவடிக்கைகள் காரணமாக சுற்றுப்புற சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. இதனால் வன விலங்குகள் உட்பட பல்வேறு உயிரினங்கள் மடிந்து போனதுடன் காற்று, நீர்,இயற்கை தாவரங்கள் போன்ற நாளுக்கு மாசுடைந்து வந்தன.
இந்நிலையில் கடந்த மாதம் டிசம்பர் 31ம் திகதி சீனா ஹூவான் நகரில் பரவியதனை தொடர்ந்து பல நாடுகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டன.இதனால் பல நாடுகள், நகரங்கள் மூடப்பட்டன.
இவ்வாறு நாடுகள் நகரங்கள் மூடப்பட்டதன் காரணமாக மனிதனின் செயப்பாடுகள் மூடங்கி போயின.மனித உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன போதிலும் சுற்றுப்புற சூழல் மாசுடைதல் மிக குறைவாக உள்ளன.
இவ்வாறு நாடுகள் நகரங்கள் மூடப்பட்டதன் காரணமாக மனிதனின் செயப்பாடுகள் மூடங்கி போயின.மனித உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன போதிலும் சுற்றுப்புற சூழல் மாசுடைதல் மிக குறைவாக உள்ளன.
இந்நிலையில் சன நட மாற்றம் குறைந்ததன் காரணமாக காட்டில் உள்ள வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றித்திரிய ஆரம்பித்துள்ளன.இவ்வாறு சுற்றித்திரித்திரயும் வன விலங்குகள் நாளாந்தம் செத்து மடிவதனை அவதானிக்க கூடியதாக உள்ளன.
இன்று (27) அக்கரபத்தனை மன்ராசி நிவ்போர்ட் தோட்டத்தில் இன்று பிறந்த சிறுத்தை குட்டியொன்று இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சிறுத்தை குட்டியினை ஈன்றுவிட்டு மனிதர்களின் நடமாற்றம் காரணமாக ஓடியிருக்கலாம் எனவும் .இந்த குட்டிக்கு உரிய கவனிப்பு மற்றும் பால் இல்லாததன் காரணமாக இது இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றன.
இதே வேளை நேற்று முன்தினம் நோர்வூட் நிவ்வெலி பகுதியில் சிறுத்தை குட்டியொன்று வாகனத்தில் மோதுண்டு இறந்து கிடந்தன.
கடந்த 24 ம் திகதி டிக்கோயா தரவலை எட்லி தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று மனிதர்களால் விலங்குகளை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்குண்டு வன ஜீவராசிகளால காப்பாற்றப்பட்டன.
கடந்த 18.04.2020 மஸ்கெலியா தம்பேதென்ன தோட்டத்தில் பெண் சிறுத்தை புலியொன்று மனிதனால் வைக்கப்பட்ட பொறியில் சிக்குண்டு மரத்தில் இருந்த நிலையில வனஜீவராசிகளால் மீட்கப்பட்டன.அதனை தொடர்ந்து குறித்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
இவ்வாறு சனநடமாற்றம் குறைந்ததன் காரணமாக பல உயிரினங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வர தொடங்கியுள்ளன.
இதனால் இந்த உயிரினங்களுக்கு எவ்வேளையிலும் ஆபத்து ஏற்படலாம் என்பது கடந்த கால சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் பொது மக்களை தெளிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதுடன் விலங்குகளின் பாது காப்பினையும் உறுதி செய்யப்பட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.