அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்க உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
சர்வசேத அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
சீனாவின் ஊஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.
அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்க உள்ள நிலையில் 44,413 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் 26,644 பேரும், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முறையே 23190, 22856 மற்றும் 20732 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸால் 12 லட்சத்து 76,808 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1 லட்சதத்து 21,885 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.