தபால் அலுவலகங்கள் மீண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறப்பு


பால் அலுவலகங்கள் மீண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றன.
கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04 திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தபால் மா அதிபர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
தபால் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு முதியோருக்கான கொடுப்பனவு போன்றவை தபால் அலுவலக கடமைப்பீடங்களில் வழமைப்போன்று
கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04 திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும்.
02. இதற்கமைவாக 2020 மே மாதத்திற்கான பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, விவசாய ஓய்வூதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தியக்காரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தும் பணிகள் முன்பு போன்று தபால் அலுவலக கரும பீடங்களில் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

03. நீர் கட்டண பட்டியலை செலுத்துதல், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கும் உள்ளூர் இலத்திரனியல் முத்திரை பரிமாறலை மேற்கொள்வதற்கும் உள்ளூர் தபாலுக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொதிகளை கையளிப்பதற்கும் இந்த தினத்திலிருந்து பொதுமக்களுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன.

04. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்று தயவுடன் எதிர்பார்ப்பதுடன் தபால் ஊழியர் சபையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

தபால்மா அதிபர்
தபால் திணைக்களம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -