கொரோனா என்ற புதிய வைரஸ் பரவிய சில மாதங்களில், உலகளவில் ஒரு லட்சத்தி 85 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல மில்லியன் கணக்கானோர் இவ் கொடிய வைரஸின் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளனர்.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் பொருளாதாரமும் நிலை குலைந்து போயுள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் 600க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.
இது தொடர்பான தரவுகளை உலக சுகாதார ஸ்தாபனமும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றன. தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் சிறிதளவுக்கு நம்பிக்கையை அளித்தாலும் இன்னும் ஆதாரப்பூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் ஒரு சில முன்ணனி நாடுகள் வேறு நாடுகளுடன் இணைந்து கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகளை நடத்துகிறது.