அகில இலங்கை வை.எம.எம்.ஏ பேரவை 30.04.1950 ம் ஆண்டு 17 கிளைகளை ஓரு குடையின் கீழ் ஒன்றிணைந்து உருவாக்க்பட்ட ஒரு ஸ்தாபனமாகும். இதனை அன்றைய அரச சிவில் சேவவை அதிகாரியாக கடமையாற்றிய மா்ஹும் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் ஸ்தாபாக தேசிய தலைவா் உருவாக்கும்போது அதன் ஸ்தாபக தேசிய செயலாளராக மா்ஹும் லாபீா் காசீம் கடமையாற்றினாா்.
தற்பொழுது இவ் இயக்கம் 30.04.2020ல் 70 ஆண்டுகளைப் பூர்த்தியை முன்னிட்டு ஸ்தாபக தினத்தினை கொண்டாட ஏற்பாடக இருந்தது . எனினும் நாட்டில் காணப்படும் கோவிட் 19 அசாதாரண சுழ்நிலை காரணமாக சகல விழாக்களும் ஒத்திவைக்க்பட்டுள்ளதோடு அன்றை தினம் ஸ்தாபக மற்றும் முன்னைநாள் தலைவா் , செயலாளா் உத்தியோகத்தா்களுக்கும் இந் நாள் தலைவா் செயலாளா் உத்தியோகர்த்தா்களுக்கும் பிராத்த்திக்குமபடி தற்போதைய தேசிய பொதுத் செயலாளா் சட்டத்தரணி அம்கா் சரீப் அவா்கள் சகல அங்கத்தவா்களையும் வேண்டிக் கொள்கிறாா்
அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவை என்பது 1968ன் 31 இலக்க பாராளுமன்றச் சட்டத்தின்னுடாக ஒன்றிணைக்கபட்ட அரசியல் சாா்பற்ற தர்ம நோக்குள்ள ஸ்தாபனமாகும். இன்று நாட்டின் சகல மாவட்டங்களிலும் வியாபித்து 147 கிளைகளுடன் தேசிய ரீதியாகவும் பல சமுக சேவை நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளமை குறிபிடத்தக்காதகவும் என செயலாளா் அம்கா் சரீப் தெரிவித்தாா்.