மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கம் நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் எடு;க்கப்பட்ட போதிலும் 70 சதவீதமானவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்கவில்லை. என மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது குறித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் பெருந்தோட்டத்துறையினை சார்ந்தவர்களின் பிள்ளைகள் பெரும்பாலோனோர் தச்சுத்தொழில், உதவியாளர்கள் ,நடைபாதை வியாபாரிகள் ஆடைத்தொழிற்சாலைகள் கடைகள் என பல இடங்களில் வேலை செய்கிறார்கள.; இன்னும பலர் வெ வ்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் தொழிலை இழந்து நிர்கதியான நிலையிலேயே இருக்கின்றனர்.
அரசாங்க சுற்று நரூபத்தின் அடிப்பமையில் எவராவது தோட்டத்தில் வேலை செய்தால் இந்த நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. ஆகவே ; இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் தோட்டத்தில் வேலை செய்வதன் காரணமாக இந்த நிவாரணம் பெற்றுக்கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது,
இவ்வாறு நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாது. போயுள்ள 70 சதவீமமானவர்களுக்கு எவ்வாறேனும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முன்னாள் அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தலைமையில் நிவாரணங்களை கிடைக்காதவர்களின் தகவல் திரட்டி அரசாங்த்திடம் சமர்ப்பித்து நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதே வேளை கொவிட் 19 தாக்கம் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள், மலையக சமூகமே தோட்டத்தொழிலாளர்களின் வருமானத்தினை நம்பியே மலையக நகரங்களில் சிறு வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகள்,பூகடை வியாபாரிகள்,சிகை அலங்கார கடைகள் ,நடைபாதை வியாபாரிகள்,என பலர் இருக்கிறார்கள.; ஆனால் தற்போது தோட்டத்தில் நிவாரணம்; கிடைக்காததன் காரணமாகவும் தொழிலாளர்களுக்கு வருமானமின்மை காணரமாக இவர்களும் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள.; ஆகவே இவர்களின் வியாபாரங்களை மீள ஆரம்பிப்பதற்கு இவர்களுக்கு அரசாங்கம் சலுகை அடிப்படையில் கடனுதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும.; என அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.