நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் 320 கிராம சேவகர் பிரிவில் கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட நிதியினை வழங்க சென்ற கிராம சேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஆகியோரை பொது மக்கள் முற்றுகையிட்டதன் காரணமாக கொண்டு சென்ற கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததனையடுத்து பொலிஸார் சென்று அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்களை துரத்தி விட்டு கிராமசேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் உட்பட அனைவரையும் அழைத்து வந்தனர்.
குறித்த கிராம சேகவகர் பிரிவில் சுமார் 300 பேர் வரை கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டதாகவும் ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் கொடுத்து விட்டு கொடுப்பனவு பெற தகுதியுடையோர்களுக்கு கொடுக்காது விட்டதாகவும் இன்றைய தினம் சுமார் 60 பேருக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் உள்ளதாக தெரிவித்ததனையடுத்து அவ்விடத்தில் அமைதியற்ற சூழல் உருவாகின.
இதனை அடுத்தே அங்கிருந்த பொது மக்கள் குறித்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விரைந்து அங்கிருந்து கோசமமிட்டவர்களை குறித்த விடயம் தொடர்பாக எழுதி தருமாறும் அதனை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்து கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகஸத்தர்களை பொலிஸ் வண்டியில் ஏற்றிச்சென்றார். அதனை தொடர்ந்து அவ்விடத்திலிருந்து மக்கள் களைந்து சென்றனர்.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் கொடுப்பனவுகள் அவருடனும் தோட்ட நிர்வாகத்துடனும் நெருக்கமானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. சில கொடுப்பனவுகள் கட்சி பார்த்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு சில குடும்பங்களில் நாலு ஐந்து பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த வித நிவாரணமும் இன்றி கஸ்ட்ட படும் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு கூட கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏழை எளிய குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ஏன் கொடுப்பனவுகள் உரித்துடையவர்களுக்கு வழங்கப்படவில்லை. என்று கிராம சேவகரிடம் கேட்டால் அதற்கும் பதில் இல்லை. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை கேட்டாலும் அதற்கும் பதில் இல்லை. அப்படி என்றால் இவர் ஆள் பார்த்து கொடுக்கிறார். என்று தான் கருத வேண்டும.; அரசாங்கம் ஒரு வீட்டில் நாலு ஐந்து குடும்பங்கள் இருந்தாலும் அக்குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பபட்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்;குமாறு கூறியிருக்கிறது.ஆனால் இவர் எவ்வித காரணங்களையும் கூறாது கொடுப்பனவுகளை கொடுக்க மறுக்கிறார். என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் பரிசீலனை செய்து நியாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.