நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை மற்றும் கொத்தல்ஹேன பகுதியில் வசிக்கு இரண்டு நபர்கள் கொரோனா தொற்று பரவியள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (26) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனை நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளர் சேனக்க தலகல்ல தலைமையில் நடைபெற்றன.
கினிகத்தேனை மற்றும் கொத்தல்ஹேன பகுதிக்கு கடந்த 20 ம் திகதி வெலிசர கடற்படை முகாமையில் கடமையிலிருந்த இரண்டு இரானுவ வீரர்கள் விடுமுறையில் தங்களது வீட்டுக்கு வந்துள்ளனர்.அதனை அந்த கடற்படை முகாமில் கொவிட் 19 பரவியுள்ளதாக பல இரனுவீரர் கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே இன்று இந்த இருவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இரண்டு குடும்பங்களுடன் தொடர்புடைய எட்டு வீடுகளைச் சேர்ந்த சுமார் 20 எதிர்வரும் மே 04 ம் திகதி வரை சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொது சுகாதரா பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.