ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி பொருளாளர் ஏ.சி.எஹியாகான் ஆகியா நான் யாரோடும் இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை என்கிறார்.
எனது அன்பான ஆதரவாளர்களுக்கும் எனது பேஸ்புக்கில் இருக்கின்ற நண்பர்களுக்கும் ஒரு அறிவித்தலை இந்த இடத்தில் நான் தெரியப்படுத்துகிறேன்.
ஒரு சிலருடைய தகவலுக்கு அமைய இந்த எனது உண்மையான தீர்மானத்தை விளக்கியிருக்கிறேன். அது என்னவென்றால் தற்போது இந்த நாட்டிலேயும் உலகத்திலேயேயும் அகோரமான கொடூர நோயாகிய கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை நான் அந்த மாவட்டத்தில் இல்லாவிட்டாலும் எனது குழுவினரை வைத்து செய்து கொண்டிருக்கின்றேன் அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
ஆனால் ஒரு சிலர் வீடுகளுக்குச் சென்று தற்போது சொல்லுகின்றார்களாம் நான் இரகசியமாக அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று. மக்களுக்கு நான் மிகவும் தெளிவாக விளங்க படுத்துவது என்னவென்றால் நான் ஒரு முக்கியமான கட்சியிலே எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களினால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியிலே முக்கிய பெரும் பதவிகளில் ஒன்றான தேசிய பிரதி பொருளாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் கட்சியினுடைய தீர்மானம் யாருக்கு என்னவென்று மக்களுக்கு மிகவும் தெளிவாக தெரிந்திருக்கும்.
ஆனால் இதுவரைக்கும் நான் யாருடனும் இரகசியமாக தொடர்பு வைத்து உங்களுக்கு நான் ஆதரவளிப்பேன் என்று ஒருபோதும் வாக்குறுதி அழிக்கவில்லை.
இரண்டு பாக்கமும் கால்களை வைக்கின்ற பழக்கம் இந்த எஹியாகான் என்பவரிடம் ஒருநாளும் இருந்ததில்லை என்னை யாரும் எதிர்த்தால் அவர் எவராக இருந்தாலும் சரி அவர்களுடன் நேரடியாக களத்தில் நின்று யுத்தம் செய்ய பழகி இருக்கிறேன். ஆகையினால் எங்களுடைய ஆதரவாளர்கள், நண்பர்கள்,சகோதரர்கள் குழம்ப வேண்டிய அவசியமில்லை..
தற்போதைய சூழ்நிலையில் அரசியலைப்பற்றி பேசுவதற்குரிய காலம் இதுவல்ல சிலருக்கு விளங்காமல் அரசியலை பேசுகின்றார்கள் என்றால் அது நான் செய்த தவறல்ல ஆகையினால் அரசியல் ஆட்டம் ஆரம்பிக்கின்ற போது நான் நிச்சயமாக அந்தக் களத்தில் நின்று ஆட்டம் ஆடுவேன் அந்த ஆட்டத்தில் எனது ஆதரவாளர்கள் நண்பர்கள்
என்னோடு இருக்கின்ற எனது உறவினர்கள் அனைவரும் எப்போதும் போல் என்னுடன் கூட இருப்பார்கள் என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும்.
இந்த தகவலை நான் இன்று உங்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்துகின்றேன்
உங்களுக்கு அல்லாஹ் துணையாக இருப்பான்.இந்த ரமழான் மாதத்தில் உங்களுக்கு எனது பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
எ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்