இரண்டாம் கட்டமாக 400 குடும்பங்களுக்கு பொதிகள்
கொரோனா தொற்று அச்ச சூழல் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குகின்ற சேவைகளை கல்முனை நிதாஉல் பிர் சமூக சேவைகள் அமைப்பு காத்திரமான முறையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.இந்த அமைப்பால் முதல் கட்டமாக 1000 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் கடந்த வாரங்களில் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக 400 குடும்பங்களுக்கு நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட உதவிகள் அமைப்பின் சாய்ந்தமருது அலுவலகத்தில் தலைவர் இஸட். எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் வைத்து பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது போன்ற இடங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.