தமிழ் மக்கள் ஆபத்தில் வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றச்சாட்டு


வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனாதனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் 
வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றச்சாட்டு 

டமாகாணம் எந்த வித கொரோனா அச்சுறுத்தல் அற்ற முறையில் இருந்து வந்தது அப்படி இருந்தும் போதகர் ஒருவரால்தான் யாழ்மாவட்டம் பாதிப்பிற்கு உள்ளாகியது அதிலிருந்து மக்கள் மீண்டு வரும் பொழுது தற்பொழுது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய இராணுவத்தினரை வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கொண்டு வந்து பலாத்காரமாக தங்க வைக்க முற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

இந்த விடயத்தில் வடமாகாணத்தின் கல்வித்திணைக்களத்தின் ஆலோசனைகளையோ சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைகளையோ பெறப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
மேலும் முல்லைத்தீவு பாரதிபுரம் இரணைப்பாலை போன்ற பாடசாலைகளில் இவர்களை தனிமைப்படுத்த உள்ளதாக தெரிய வருகிறது இலங்கை முழுவதும் பத்தாயிரத்து இருபது பாடசாலைகள் இருக்கிறது அந்தந்த பிரதேசங்களில் பெருந்தொகையான பாடசாலைகள் இருக்கும் பொழுது எதற்காக அரசு வடக்கில் உள்ள பாடசாலைகளை தெரிவு செய்கின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமாக இருக்கின்றது.

எமது மக்களை கொரோனா நோயில் தள்ளிவிடுவதுதான் இவர்களது நோக்கமா? உரிய முகாம்களுக்கு அருகில் பாடசாலைகள் அமைந்திருக்கின்றன அந்த பாடசாலைகளை இவர்களது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு எடுத்தால் என்ன அதைவிடுத்து எதற்காக வடபகுதியில் உள்ள பாடசாலைகளை தெரிவு செய்ய வேண்டும் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாக இல்லை என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -