இதற்கமைவாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் 27 ஆம் திகதி காலை 5.00 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் இரவு 8 மணி தொடக்கம் மறுநாள் காலை 5 மணி வரையில் மாத்திரமே அமுலில் இருக்கும். ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இரவு 8 மணிக்கு இந்த மாவட்டங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.
இதற்கமைவாக வார இறுதியில் ஏப்ரல் 25ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 26ஆம் திகதி இந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கொழும்பு கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் நடைமுறைப்பட்ததப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் மற்றும் விவசாய நடவடிக்கை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனை மற்றும் அறிவுரைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அதில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.