கல்முனை பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்ட பின்னர் பயணிக்க அனுமதி


எம்.எம்.ஜபீர்-
ம்பாரை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து கல்முனை பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் வைத்து தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே நாவிதன்வெளி நோக்கி பயணிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் நாவிதன்வெளி பிரதேச சபையும் இணைந்து இராணுவத்தின் உதவியுடன் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனின் வழிகாட்டலில் கல்முனை பிரதேசத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் நிறுத்தப்பட்டு முற்றாக நுண்ணுயிர் தொற்று நீக்கும் மருந்து தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதில் நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட், பொதுச் சுகாதார பரிசோதர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்டடோர் இத்தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டனர்.
இப்படியான நடவடிக்கையின் போது, தவறுதலாக எந்த பயணியும் விடுப்பட மாட்டார் எனவும் அனைத்து நுண்ணுயிர்களை அழிக்கக் கூடிய நாசனிகள் இந்த பாதையில் வரும் வாகனங்களுக்கு விசிறப்பட்டு தொற்று நீக்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -