முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சர் எ.ரமேஸ்வரன் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினை தொடர்ந்து மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.சில அரசியல் வாதிகள் சொல்கிறார்கள் கட்சி ரீதியாக சிலருக்கு கிடைக்கவில்லை. என்று ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் உங்களுக்கு தெரியும் எந்தவித கட்சி பேதமும் பார்க்காமல் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவாக 52 ஆயிரத்து 589 பேருக்கு 268 மில்லியன் ரூபா சமூர்த்தி கொடுப்பனவாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.ஆகவே மக்கள் மத்தியில் வராத அரசியல் தலைவர்களே கட்சி ரீதியாக கொடுப்பனவு பெற்றுக்கொடுப்பதாக தெரிவிக்கிறார்கள் என மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று (22) திகதி வட்டகொடை அவரது வீட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்.
கடந்த அரசாங்கத்தில் உங்களுக்கு தெரியும் கட்சி ரீதியாக தான் சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.அதனால் காத்திருக்கும் பட்டியலில் இருந்த இதில் 34 ஆயிரத்து 355 பேருக்கு 5000 படி 171 ஒரு மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது அது மாத்திரமின்றி தற்காலிக வேலையில் ஈடுபட்டுள்ள வேலைகளை இழந்துள்ள,தற்காலிகமாக வேலை செய்கின்ற கொழும்பிலிருந்து வருகை தந்த என 63 ஆயிரத்து 700 பேருக்கு இந்த 5000 கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க பட்டுள்ளது.

இந்த விடயத்தில் சமூர்த்தி,கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் உட்பட அனைவருக்கு நன்றி கூற வேண்டும் அவர்கள் இரவு பகல் பாராமல் கடமையில் ஈடுபட்டு பெற்றுக்கொடுத்ததற்காக.அதில் ஒரு சில குளறுபடிகள் இருந்தன ஒரே குடும்பத்தில் நாலு ஐந்து பேர் இருந்தால் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.அது தொடர்பாக தற்போது ஒரு சுற்று நிரூபம் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ளது.அதில் நாலு ஐந்து பேர் இருக்கும் குடும்பத்தினை கருத்தில் கொள்ளாது குறித்த குடும்பத்தில் 5000 குறைவாக சம்பளம் பெற்றிருந்தால் இவர்களுக்கு தற்காலிக வேலையில் ஈடுபட்டவர்களுக்கும் வழங்க வேண்டும்.
பெருந்தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தவிர்ந்து கெசுவலாக வேலை செய்பவர்களுக்கு இந்த கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்,இதில் ஒரு சிலர் உங்களுக்கு தெரியும் காங்கிரஸ் உறுப்பினர்களும் சரி ஏனைய உறுப்பினர்களும் சரி இந்த நோயினை கூட கருத்தில் கொள்ளாமல் மக்கள் மீது அக்கறை கொண்டு அந்த மக்களின் விண்ணப்பங்களை பெற்று அதனை பிரதேச செயலாளர்களுக்கு விண்ணப்பித்து இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஆனால் உங்களுக்கு தெரியும் ஒரு சில அரசியல் வாதிகள் மக்கள் மத்தியிலேயே வராமல் கட்சி ரீதியாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்,ஆகவே இவர்கள் மக்கள் மத்தியில் சென்று பார்த்தால் தெரியும் யாருக்கு கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று இன்றுள்ள சூழ்நிலையில் நாம் அரசியல் பேதங்களை மறந்து முக்கியமான பிரச்சினையினை தீர்ப்பதற்கு ஒன்றினைய வேண்டும் இன்று ஜனாதிபதியும் சரி பிரதமரும் சரி பெசில் ராஜபக்ஸவும் சரி பல்வேறு முயற்சிகளை செய்து தான் இந்த நோயிலிருந்து விடுபவதற்கு எல்லா மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள் இதில் எவ்வித கட்சி பேதமும் பார்க்க அவசியமில்லை.

பெற்றுக்கொடுத்துள்ளார்கள் எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயப்பட வேண்டும் என்பது தான் எமது எதிர்ப்பார்ப்பு.அதே நேரம் தேர்தல் அவசியமில்லை என்று எதிர்க்கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது.அரசாங்கம் ஒரு போதும் தேர்தலை நடத்துவதனை விட இந்த நோய் கட்டுப்படுத்துவதற்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றது.அத்தோடு தேர்தலை நடத்தினாலும் தவறு என்று சொல்வதற்கில்லை ஏனென்றால் உலக நாடுகளில் கொரோனா தாக்கம் இருக்கும் போது தான் தேர்தல் நடத்தியுள்ளார்கள் அவர்கள் பாரிய பாதிப்பு எதனையும் சந்திக்கவில்லை.இதே நேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அதிகமாக 5000 கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் காத்திருக்கும் பட்டியலில் அதிகமாக இருந்துள்ளார்கள் என்றால் யாருக்கு அதிகமாக கடந்த காலங்களில் பெற்றுக்கொடுத்திருக்கப்பட்டுள்ளது என்று நீங்களே தீர்மானியுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.