க.பொ.த. (சா/தர) பரீட்சையில் இம்முறையும் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள்

காமிஸ் கலீஸ்-
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/தர) பரீட்சையில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் 7 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தர சித்தி பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் 8 பாடங்களில் A தர சித்தியினை 5 மாணவர்களும் 7 பாடங்களில் A தர சித்தியினை 2 மாணவர்களும் பெற்றுள்ளதோடு மேலும் பல மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் 2019 இல் இப் பாடசாலையில் இருந்து 78 மாணவர்கள் க.பொ.த. (சா/தர) பரீட்சைக்கு தோற்றியுள்ள நிலையில் 77 (99%) மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு 76 (97%) மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம் மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அவர்களை வழிநடாத்திய அதிபர், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் ஆகியோருக்கும் அம் மாணவர்களின் பெற்றோருக்கும் எமத மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி:
ஐ. உபைதுல்லாஹ்
அதிபர் - கமு/கமு/அல்-ஹம்றா வித்தியாலயம், மருதமுனை.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -