முன்னாள் அமைச்சர் ரிக்ஷாத் பதியுதீன்...


வன்னி சமூகத்தின் அடையாளம், முன்னாள் அமைச்சர் கெளரவ அமைச்சர் பாராட்டப்பட வேண்டியவரா அல்லது ஓரங்கட்டப்பட வேண்டியவரா............? தேசியமட்டத்தில் தொடரும் வாதம் இது........!!

மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து மூவீன மக்களையும் ஒன்றிணைத்து பணியாற்றியவர்,
பத்து வருடங்களுக்கு மேல் கைத்தொழில் அமைச்சை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்,
இலங்கையை சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்தியதில் சான்றிதழ் பெற்றவர்,
சதோச போன்ற நிறுவனங்களின் பல கிளைகளை குறுகிய காலத்தில் நிறுவி, இலாபகரமாக நிறுவகப்படுத்தியவர்,
ஏக காலத்தில் பல அமைச்சுக்களின் அமைச்சராக இருந்து பணியாற்றியவர்,
சிறந்த, துடிப்புள்ள அமைச்சர் என பலபோது பலரால் புகழப்பட்டவர்,
யுத்த முடிவில் வன்னி மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தி, பல நூறு பாடசாலைகள், பள்ளிவாசல்கள் வீடுகள், பாதைகள், பொது கட்டிடங்னங்கள் நிர்மாணித்ததில் வெற்றிகண்டவர்,
ப்பா, இவ்வளவு செய்தவர் புகழப்பட வேண்டியவர் தானே,

அப்போ ஏன் விமர்சிக்கப்படுகிறார்............?

இவர் தொடர்பான விமர்சங்களை பல‌ வகையில் வகைப்படுத்தலாம்,
1. இவருடைய கட்சியின் ஏனைய அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கிளை நிருவாகிகள் செய்கின்ற தவறுகள் காரணமாக விமர்சிக்கப்படுவது,
2. அமைச்சர் அடையாளம் காண தவறிய சந்தர்ப்பவாதிகள்,
3. மேற்கொண்ட அபிவிருத்திகளில் சரியான பயனாளிகளை அடையாளப்படுத்தியதில் இவரது கட்சியால் இழைக்கப்பட்ட குறைபாடுகள்
4. எதிர்கட்சி அரசியல் செய்யும் போது முன்வைக்கப்படும் விமர்சனங்கள்,
5. இவருடை வளர்ச்சியின் மீது எதிரிகளால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்,
6. வன்னி அரசியல் என்ற வட்டத்தை கடந்து தேசிய அரசியல் என்ற அகழ்ந்த கால் பதிப்பு வன்னி தேர்தல் எல்லையின் அபிவிருத்தியில் ஏற்படுத்திய தொய்வு, பின்னடைவு, தடைப்படல்
7. அபிவிருத்திப் பணிகளில் எது அவசரம், எது அவசியம் என்பதை வகைப்படுத்துவதில் அவர் விட்ட குளறுபடிகள்,
8. சில அபிவிருத்தி பணிகளில் மக்களுக்கு தெளிவு கிடைக்காதபோது முன்வைக்கப்படும் விமர்சனங்கள்,
9. வெளிப்படைத்தன்மை (transparency) மீது ஏற்படும் விமர்சங்கள்
10. பிரதேச வாதம் மேலெழும் போது முன்வைக்கப்படும் கண்மூடித்தனமான விமர்சனங்கள்,
11. அரசியலில் ‘இனவாதம்’ பிரச்சாரப் பொருளாக பயன்படுத்தப்படும் போது முன்வைக்கப்படும் விமர்சனங்கள்,
12. ஒரு குறித்த இனம் குறிவைக்கப்படும் போது அதன் தலைவர் / தலைவர்கள் குறிவைக்கப்படும் எழுதப்படா சர்வதேச விதி,
13. அமைச்சரின் ஆதரவாளர்கள் பரப்பும் ஓவர் புகழ்ச்சி மூலம் ஏற்படுத்தும் விமர்சனங்கள்,
14. அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்கட்சி மீது காண்பிக்கும் நாகரீகமற்ற விமர்சனங்கள் / கருத்துக்கள் ஏற்படுத்தும் வெறுப்பு அரசியல்,
15. அனைவரையும் மகிழ்விக்க முடியாதபோது ஏற்படுத்தும் முறையற்ற விமர்சனங்கள்,
16. முன்வைக்கப்ப‌டும் / நடைமுறைப்படுத்தும் அபிவிருத்தி / கொள்கையில் உள்ள தொழில்னுட்ப தவறுகள் (Technical errors) ஏற்படுத்தும் விமர்சங்கள்,
17. காரணமின்றி / அடையாளப்படுத்த முடியா விமர்சனங்கள்

இந்த கட்டுரையின் நோக்கம்:
1. அமைச்சர் அவர் தொடர்பாக புரிந்துகொள்ள வேண்டிய அவர்தரப்பு பிழைகள்
2. அமைச்சரின் ஆதரவாளர்கள் அவர்கள் தொடர்பாக புரிந்துகொள்ள வேண்டிய விமர்சன‌ங்கள்
3. எதிர்கட்சி அரசியல்வாதிகள் / விமர்சகர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பொது நிதிகள் /விதிகள்,
4. ஒருவர் தொடர்பான நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இருபக்க நியாயங்கள்


சிந்தனை & எழுத்து:
BY இஸ்ஸதீன் றிழ்வான்
30/04/2020
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -