கொரோனாவை ஒழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள்- வீடுகளில் இருந்தால் போதும் மருத்துவ தாதியின் உருக்கமான வேண்டுகோல்- நோய் ஒழிந்தால்தான் நாங்கள் நிம்மதி பெறலாம் நீண்ட நாற்களாக கொரோனவுக்கு எதிராக தாதியாக இருந்து நோயாளிகளுக்கு வைத்தியம் செய்து பணியாற்றும் தாதிதியின் நிலைமை
பிரித்தானியாவில் தாதியொருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார். தொடர்ந்து முகக்கவசம் அணிந்து முகம் கன்றிய புகைப்படத்தை பதிவிட்டு, ஈஸ்டர் பண்டிகைக்கு வெளியில் செல்பவர்கள் தனது முகத்தை நினைவில் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிங்ஹாம்ஷையரின் ஈஸ்ட் ரெட்ஃபோர்டைச் சேர்ந்த ஐமி கூல்ட் நேற்று தனது பேஸ்புக் கணக்கில் இந்த பதிவை இட்டிருந்தார்.
டான்காஸ்டர் மற்றும் பாசெட்லா போதனா மருத்துவமனையில் பணிபுரியும் தாதியான இவர், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் வாரத்தில் 65 மணி நேரம் பணிபுரிந்து வருவதாகக் கூறினார். நாளாந்தம் 13 மணித்தியாலம் 13 மணி நேரம் முகக்கவசத்தை அணிந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், வார இறுதியில் ஈஸ்டர் பண்டிகைக்காக வெளியில் செல்பவர்கள் “தயவு செய்து எனது முகத்தை நினைவில் கொள்ளுங்கள்’ என்று மன்றாட்டமாக கேட்டுள்ளார்.
- அவர் வெளியிட்ட புகைப்படத்தில், முகக்கவசம் தொடர்ந்து அணிந்து முகத்தில் கன்றிய அடையாளங்கள் உள்ளன.
- கடந்த ஒன்றரை மாதங்களாக இப்படியாக தொடரும் தனது வாழ்க்கையில், குடும்பத்தை சந்திப்பதில் உள்ள சிரமத்தையும் குறிப்பிட்டுள்ளார். எனினும், கொரொனாவிற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
- ஏறக்குறைய மூன்று வாரங்களாக பிரத்தானியாவில் நடைமுறையில் உள்ள நாடு தழுவிய பூட்டுதலுடன், சமூக விலகலை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
- இது ஒரு ஐ.சி.யூ தாதியின் முகம், உங்களிடம் பிச்சை கேட்கிறது: உள்ளே இருங்கள், எங்களைப் பாதுகாக்கவும், என்.எச்.எஸ்ஸைப் (தேசிய சுகாதார சேவை) பாதுகாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் உதவுங்கள்.’ என குறிப்பிட்டுள்ளார்.