அத்தோடு மூன்று நாட்களுக்குள் மனமுவந்து எமது வேண்டுகோளுக்கு அமைவாக பல சிரமங்களுக்கு மத்தியில் நன்கொடைகளை குறித்த உயரிய நோக்கத்துக்காக கையளித்த கட்டார் வாழ் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் ஒத்துளைப்பு வழங்கிய எல்லோரையும் இவ்வுலகிலும், மறுமையிலும் இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டும் என்பதோடு மேலும் அவர்களின் தொழில் துறைகளில் செலுமையையயும் பறக்கத்தையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
மேலும்... ஒன்லைன் மூலம் தங்களது பங்களிப்பினை நேரடியாக செய்த சகோதரர்களான இஸ்ஸத் 25000, சித்தீக்150000, அஜ்மீர் 30000, சமீர் அஹமட் 10000 ஆகியோர்களின் பங்களிப்போடு 380200 ரூபாய்கள் ஒட்டுமொத்தமாக கட்டார் வாழ் சகோதரர்கள் குறித்த நிவாரண பணிக்கான அமைப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளமையினை நாங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் விடயமாகவும், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ள விடமாகவுமே பார்க்கின்றோம்..
அத்தோடு, குறுகிய மூன்று நாட்களுக்குள் நாங்கள் கட்டார் சகோதரர்கள் மத்தியில், கல்குடாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உயரிய பணிக்கு என்னோடு மிகவும் அர்பணிப்புடன் செயற்பட்ட எனதருமை சகோதரர் றியாஸ் பாருக் மற்றும் எனக்கு அறிவுசார் ஆலோசனைகளை வழங்கி நண்பன் துவான் (பொபி), கணக்கறிக்கைககளை பட்டியல்படுத்திய சமீர் அஹமட், நன்கொடையாக வாழங்கப்பட்ட தொகையினை உரிய நேரத்தில் குறித்த நிவாரண பணிக்கான அமைப்பிடம் போய் சேருவதற்கான உதவியினை செய்துதந்த பெளசருக்கும் எனது இதயத்தில் வெளிப்படும் நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்....
அதனோடு சேர்த்து சில நண்பர்கள் வேட்டிக்கொண்டதற்கு அமைய நேரடியாக அனுப்பி பங்களிப்பு செய்த நண்பர்களை தவிர மற்றையவர்களின் பெயர்கள் கணக்கறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளதுடன் தேவைப்பகின்றவர்கள் எமது வட்சப் குழுமத்தில் பெயர்களுடன் கணக்கறிக்கையினை பார்த்துக்கொள்ளலாம்...
என்ற கருத்துக்களோடு எங்களுடைய சமூகத்துடனான உறவும், ஒத்துளைப்புக்களும் உயரிய நோக்கத்துக்காக வெற்றியுடன் செயற்படுவதற்கு எமக்கு இறைவனின் ஆசி கிடைப்பதற்கு எல்லோரும் ஒத்துளைப்புக்களை தருமாறு வேண்டிக்கொள்வதுடன், எங்களுடைய நோக்கங்கங்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்....
இப்படிக்கு...ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்