கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பொலிஸாருக்கு விழிப்புணர்வு செயற்திட்டம்


பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் செயற்படும் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றினை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிமனை முன்னெடுத்து வருகின்றது.
புதன்கிழமை(29) மாலை 4 .30 மணியளவில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய பல்வேறு பிரிவுகளை சேரந்த பொலிஸாருக்கு குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்டதுடன் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையிலான கல்முனை பிராந்திய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் செயற்படும் பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்ட கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையிலான குழுவினருக்கு கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர நன்றிகளை தெரிவித்தார்--

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -