நோர்வேயில் வாழும் தம்பிலுவிலைச்சேர்ந்த ஷீரடி சாய் கருணாலய ஸ்தாபகர் வீதாவிவேக் என்ற பரோபகாரியின் உதவியால் பொத்துவில் ஊறணிக்கிராம மக்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
கொரனா தொற்றுக்கு காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்ட கிராமமாக உள்ள பொத்துவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஊறணி பிரதேசத்துக்கு 100குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மாணவர்மீட்புபேரவையின் ஸ்தாபக தலைவர் எந்திரி செல்வராசா கணேசானந்தம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சட்டத்தரணி அருள்.நிதான்சன் சமுகசெயற்பாட்டாளர்களான விh.p.சகாதேவராஜா பு.கேதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவற்றை மக்களுக்கு வழங்கிவைத்தனர்.
திரு சீதாவிவேக் எனும் பரோபகாரி திருக்கோவிலையடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் தனதுசொந்த செலவிலில் சீரடி சாயி கருணாலாயத்தை நிருமாணித்துவருகிறார். அங்கு கதிர்காமபாதயாத்திரிகர் தங்குமடம் பிரார்த்தனைமடம் வயோதிபர் இல்லம் பல அமைவிடங்கள் ஒரு வளாகத்தில் அமைக்கப்பட்டுவருகிறது. பலகோடி ருபா செலவில் பரோமபகாரி திரு சீதாவிவேக் அவற்றை நிருமாணததுவருவது குறிப்பிடத்தக்கது.