இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.\
இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக விசேட நடமாடும் வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கு அமைய சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் oDoc app கையடக் தொலைபேசி யில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதுதொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.