எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இயங்கி வரும் சிகரம் அமைப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று (20) திங்கட்கிழமை உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச செயாலாளர் திருமதி நிஹாரா மௌஜுத், சமூக சேவை உத்தியோகத்தர், எஸ்.ஜெயசேகர், ஆகியோர் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
குறித்த உலர் உணவுப் பொதிகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்த டேடா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஜீவராசாவுக்கு சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. தௌபீக் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.