அடுக்கடுக்காக பலியாகும் கொரோனா நோயாளிகளின் நிலை கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்

நியூயோர்க் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர், பிரீன் என்ற பெண் மருத்துவர், தன் கண்ணெதிரே கொரோனா பாதிப்பால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 60000 எட்டியுள்ள நிலையில் நியூயோர்க்கில் மட்டும் 17,500 பேர் பலியாகியுள்ளனர். பிரீன் கொரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கே திரும்பியிருந்தார்.

இந்நிலையில், தானும் ஏனைய மருத்துவர்களும் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்ப்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 300 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பிரீனை ‘ஹீரோ’ஆகக் கொண்டாடுமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -