வறுமையின்பிடியில் சிக்கித்தவிக்கும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளிப்பிரிவிலுள்ள சாளம்பைக்கேணி வறுமையான மக்களுக்கு ஒரு தொகுதி நிவாரணத்தை கல்முனை மாணவர் மீட்புப் பேரவை வீடுதேடிச்சென்று வழங்கிவைத்தது.
இதுவரை யாரும் கண்டுகொள்ளாத இந்த வறிய மக்களின்நிலையை அறிந்த மாணவர் மீட்புப்பேரவைத்தலைவரும் பிரபல சமுகசெயற்பாட்டாளருமான எந்திரி செல்வராஜா கணேசானந்தம் மேற்கொண்ட முயற்சிகாரணமாக இவ்வுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
பேரவைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஜெகநாத் தலைமையிலான குழுவினர் பின்தங்கிய அப்பகுதிக்குச்சென்று நிவாரணப்பொதிகளை வீடுவீடாக வழங்கினர். அவர்களுள் மாற்றுத்திறனாளிகளும் அடங்கினார்,
மாணவர் மீட்புப்பேரவை ஏலவே ஆலையடிவேம்பு நாவற்காடு மத்தியமுகாம் சவளக்கடை கல்முனை காரைதீவு திருக்கோவில் போன்ற பகுதிகளில் சுமார் 800 உலருணவு நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.