ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு !!

நூருள் ஹுதா உமர்-
ருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் விநியோகம் இன்று சனிக்கிழமை (04.04.2020) காலை 9.30 மணியளவில் மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலில் நடைபெற்றது.

மருதமுனை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ. ஹுசைனுத்தீன் (றியாழி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. எச்.சுஜித் பிரியந்த, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன, பொதுசுகாதார பரிசோதகர்கள், ஆகியோருடன் மருதமுனையின் அனைத்து பள்ளிவாசல்களின் முக்கிய நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் மருதமுனை பிரதேச பள்ளிவாசல்களின் நிருவாகங்களினூடாக நிவாரண பொதிகளினை பெறுவதற்கு தகுதியாக இனம்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 3100 பேர்களுக்கான நிவாரணப் பொதிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்த பின்னர் குறித்த 16 பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பள்ளிவாசல்களினூடாக பயனாளிகளின் வீடுகளிற்கு பொதிகளை விநியோகிக்கும் ஏற்பாடுகளினை குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகங்களே பொறுபேற்றுள்ளதாகவும் செயலனியின் செயலாளர் எம்.எல்.எம். ஜமால்டீன் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -