புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரின் கண்ணே , குசலை எனும் சிறிய ஊரில் இறால் பண்ணை வளர்ப்பு முறையை சீவனோபாயமாகக் கொண்டுள்ளனர். “நெக்டா” எனும் நிறுவனத்தின் தலைமையின் கீழ் புத்தளத்தின் இறால் வளர்ப்புப் பண்ணைகளைக் கொண்ட வலயங்களுக்கு இறால் வளர்ப்பிற்கான அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு பிரதேச வலயமும் ஒரு மாத கால இடைவெளி வைத்து இறால் பண்ணை வளர்ப்பை மேற்கொள்ளும்.
முதலில் பண்ணை சுத்திகரிக்கப்படும். பண்ணையில் உள்ள கழிவுகள் அகற்றப்படும். பண்ணைக்கான நீர் ஆற்றின் மூலம் பெறப்படும். ஒரு ஏக்கர் பண்ணைக்கு ஒரு இலட்சம் இறால் குஞ்சுகள் இடப்படும். இவை தரமான குஞ்சுகளா என நேஉவய நிறுவனம் Pஉ – சுநிழசவ மூலம் உறுதி செய்யும். ஒரு இறால் குஞ்சின் விலை 0.50 சதம் தொடக்கம் 1.00 ரூபாய் வரை காணப்படும். பண்ணையில் இட்டபின் 1ம் நாள் தொடக்கம் 15 நாட்கள் வரை “Pடுழு” என்ற உணவும் 15 நாட்கள் தொடக்கம் 25 நாட்கள் வரை “Pடு இ Pடு2” என்ற உணவும் 2 மாதம் தொடக்கம் 4 மாதங்கள் வரை டுP3 உணவும் வழங்கப்படும். இறாலிற்கான உணவு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும். (காலை 6.00 , பகல் 12.00 , பிற்பகல் 5.00 நள்ளிரவு 12.00 ) பண்ணையில் இறாலிற்கு ழு2 வாயுவை அதிகரிக்கவென Pநனயட றூநநட இயந்திரம் உள்ளது. அதன் செயற்பாட்டை இயக்கச் செய்யும் போது , அதன் காற்றாலைகள் சுழலும் போது , நீரில் அவை அழுத்தத்தை ஏற்படுத்தி ழு2 வாயுவை பிறக்கச் செய்யும். இறாலின் வளர்ச்சிப்பருவத்திற்கேற்ப Pநனயட றூநநட குறிப்பிட்ட கால இடைவெளியில் இயங்கச் செய்யப்படும். 1மாதத்தில் 1 மணித்தியாலமும் , 2ம் மாதத்தில் 2 மணித்தியாலத்திற்கு ஒரு தடi- வயும் , 3ம் மாதத்தில் முழுநேரத்திலும் இயங்கச் செய்யப்படும். னுழடயஅவைந என்ற இரசாயணப்பதார்த்தத்தை ஒரு மாதத்திற்கு ஒரு தடவையேனும் பண்ணையில் இட வேண்டும். இது நீரின் Pர் பெறுமானத்தை நடுநிலையாகவும் பேணவும், இறாலில் கல்சியம் படிதலைத்தடுக்கவும் , பண்ணையில் நுண்ணங்கிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும். பொதுவாக 03 அல்லது 4 மாதங்களில் ஒரு இறாலின் நிறை 14ப ஆகும் பட்சத்தில் அறு- வடை மேற்கொள்ளலாம். அப்போதான சந்தையில் 1முப இறாலின் விலையைப் பொறுத்து அறு- வடையான இறாலின் விலை தீர்மானிக்கப்படும். இறால் நோய்வாய்ப்படையாமல் இருந்தால் அதிக இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இறால் பண்ணை வளர்ப்பும் அதன் பிரச்சினைகளும்
நோய்வாய்ப்பட்டால் ஒன்றிற்கு 2 மடங்கான நட்டம் ஏற்படும். அறுவடையான இறால்களை ளூநளாயn ளநந கழழன இ யுடிநஒ ளநந கழழன இ Pசழறn உலடழn இ யுஒசழஅiஉ ளநந கழழன போன்ற தனியார் நிறுவனங்கள் இறால்களை விலைக்கு வாங்கும்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
உள்ளுரிலே இறால் பண்ணை வளர்ப்பு முi- றயை சீவனோபாயமாகக் கொண்ட எம்மூர் சமுதாயம் , பல பிரச்சினைகளுக்கும் , சவால்களுக்கும் முகங்கொடுக்கின்றனர். சொந்தமாய் இறால் பண்ணை இல்லாதவர்கள் குத்தகைக்கு வாங்கி இறால் பண்ணை வேலைகளை ஆரம்பிக்கின்றனர். இறால் வளர்ப்பிற்கு அதிக முதலீடு தேவை. ஊரவர்கள் முதலீட்டைத் தயார்ப்படுத்திக் கொள்ள வட்டிக்கு கடன் எடுப்பபதும், நகைகளை அடகுவைப்பதும், சொத்துப் பத்திரம், வாகனச்சான்றிதழ்களை அடகு வைத்து முதலீட்டைப் பெறுவது காலங்காலமாக நடந்தேறி வருகின்றன. கடன்பெற்ற முதலீட்டைக் கொண்டு பண்ணைக்கான வேலைகளை ஆரம்பிக்கின்றனர்.
அம்முதலீடு குத்தகைக்கும், நீர்பாய்ச்சும் இயந்திரம் , சுநனயடறாநநட இயந்திரங்களுக்கான குத்தகைக்கும், 4 மாத மின்சாரக்கட்டணத்திற்கும், இறாலிற்குமான உணவு , னுழடயஅடைந செலவு மற்றம் ஏனைய செலவீனங்களுக்கு கட்டுப்படியாகாது. எனவே உடன்கடன்தொகை வழங்கும் தனியார்வங்கிகளின் உதவியை நாடி அதிக வட்டித்தொகைக்கு கடனைப் பெறுகின்றனர்.
இறால்வளர்ச்சிக் குறைபாட்டாலோ ழச நுண்ணங்கித் தொற்றுக்குட்பட்டாலோ 2 மாதங்களிலேயே அறுவடை செய்ய வேண்டிய நிலை உண்டாகும். இதன் போது அத்தரமற்ற நோய்வாய்ப்பட்ட இறாலிற்கான விலை நிர்நணயம் குறைக்கப்படும். இதன் போது மொத்த செலவிலிருந்து வரவைக் கழித்தால் 5 அல்லது 6 லட்சம் ரூபா நட்டம் ஏற்படும். வழமையாக ஒவ்வோர் பண்ணை வளர்ப் பாளர்களுக்கும் இத்தகைய நட்டம் ஏற்பட கடனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் காலப்போக்கில் கடன் தொல்லை தாங்கமுடியாமல் வெளிநாடு சென்று உழைக்கும் வழமையாகியுள்ளது. மற்றும் அடகு வைத்த பொருட்களை மீட்க முடியாமல் எத்தனையோபேர் நடுத்தெருவிற்கும் தள்ளப்பட்டனர்.
இதற்கான அடிப்டைக் காரணம் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் கைகொடுக் காமையே ஆகும். அதாவது பண்ணைகளை அண்டிய ஆற்றுப்பள்ளத்தாக்கிலே அதிக கழிவுப்பொருட்கள்
காணப்படுகின்றன. அவற்றை முறையாக பராமரித்து சேற்றினை (சகதி) அகற்றி ஆற்றுநீரின் மட்டத்தை உயர்த்த வேண்டியதேவையுள்ளது. ஆற்றில் அதிக களிமண் என்பதால் நிலத்தடிநீர் மேலெழுவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றது. இதனால் நீர் மாசடைதல் காரணமாக தரமான இறால் வளர்ப்பினை மேற்கொள்ள முடியாது உள்ளது. பல முறை அரசாங்கத்திடம் முறையிட்டும் ஒரு தகவலும் இறுதிவரை கிடைக்கவில்லை.
மீன்பிடித்தொழிலாளர்களும் பல பிரச்சினை களை எதிர்கொள்கின்றனர். நோயுற்ற அறுவi- டயின் பின் வெளியேற்றப்படும் கழிவு நீரானது ஆற்றில் கலப்பதால் உயிர்வாழ் அரிய மீனினங்கள் இறக்கின்றன. இதற்கு 10 அடி ஆழத்தில் ஆற்றின் ஒரு பகுதியில் அந்நீரை தேக்கிவைத்து முறையான பரிகரிப்பை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கும் கைகொடுக்க அரசாங்கம் முன்வரவில்லை.
பண்ணை வடிகால்கள் வழியே தேங்கி யிருக்கும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற சிறந்த வடிகாலமைப்புமுறை இல்லை இத னால் பல சுகாதாரப்பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.
இத்தயை பிரச்சினைகள் காணப்பட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்யாது ஒவ்வோர் பண் ணைக்கான வரியை மட்டும் அறவிடுவதில் குறிபார்த்து நிற்கும் ஒரு அவலநிலை இவ்ஊரில் நடந்தேறிவருகின்றன. தேர்தல் காலங்களில் சிலர் வீராப்பாக பண்ணைக்கான செயற்றிட்டங்களை நகர்த்தித்தருவதாக கூறிச்செல்வது கூறிய அப்பொ ழுதுடனே மறைந்து விடுகின்றது.
இறால் வளர்ப்பிற்காக பண்ணையில் உள்ள மண் சுரண்டப்படும் போது குறிப்பிட்ட பல ஏக்கர் பிரதேசத்தில் மண்ணின் தரம், வளம் என்பன
பாதிக்கப்படுகின்றன. இதனால் காலப்போக்கில் அவ ;விடம் களித்தரையாக மாறிக்கொண்டு வருகின்றது. சில பண்ணைகள் அழிக்கப்பட்டதால் அந்நிலம் ஒரு பயன்பாட்டிற்கும் உதவாத தரிசு நிலமாக மாறியுள்ளது.
செல்வந்தர்கள் சில கூலிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி பண்ணை வேலைகளை கண்காணிக்கவிட்டுள்ளனர். அவர்களது உழைப்பில் திண்டாடும் கயவர்கள், சம்பளத்திலும் கைவைக்கத் தவறவில்லை. பலவித குற்றங்குறைகளைக்கூறி சம்பளத்தில் தட்டிக்கழித்தபின் ஏமாற்றத்துடன் வீடுதிரும்பும் ஏழை ஊரவர்களின் நிலை அடிமைத் தனத்திற்கு குரல் கொடுக்க முடியாது மறைகின்றது.
குத்தகைக்குப் பண்ணை வாங்கி நோயுற்ற அறுவடை முடிந்தபின் அவரது இலாபத்தில் பங்கு கொள்ள எவனெவனோ உறவாடும் துர்ப்பாக்கிய நிலையும் உள்ளது. நிலச்சொந்தக்காரன், கடன் அறவிட்டவன் , பங்குடன் அறுவடை செய்தவன் என அவர்களது பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கடைசியில் கடின உழைப்பில் சொற்ப இலாபத்தோடு திரும்புகின்றான். எனவே இத்தகைய பண்ணை வளர்ப்புமுறை உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்தாலும் அரசாங்கம் அதற்கான சலு- கைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கலாம். மற்றும் பண்ணை வளர்ப்பின் முதலீட்டிற்கான கடன்தொகையை வழங்கும் திட்டங்களை அரச வங்கிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். சிறந்த தரமான உற்பத்தியின் ஊடாக இறால் வளர்ப்பினைன ஊக்குவித்து சந்தையில் இறாலிற்கான கேள்வியை அதிகரித்து நமது உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
சில்மியா யூசுப்-