வீரகேசரி நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் முன்னாள் வீரசேகரி ஞாயிறு வாரமலர் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் தொழில் புரிந்தவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான நல்லத்தம்பி நெடுஞ்செழியன் தனது 65 வயதில் 21.4.2020 செவ்வாய்கிழமை மாலை காலமானார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் அன்புத் தந்தையாவார். இவர் உடல் நலம் குறைவால் நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 21.4.2020 செவ்வாய்கிழமை மாலை காலமானார். அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக தலவாக்கலை சென்கிளையார் கொலனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுவதோடு இறுதி கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.