கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தின்மார் 52 பேர், கோயில் குருக்கள்09 ,சம்மாந்துறை சிறி பாத தேவி சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கும் நிவாரண உதவி வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிவாரண உதவிகள் யாவும் அரிசி ஆலை உரிமையாளர் அமைப்பினால் நிதி உதவி அணுசரனையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினூடாக செவ்வாய்க்கிழமை(21) மதியம் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா உதவி பிரதேச செயலாளர் எம்.எம் மௌலவி அஷ்சேக் அப்துல் காதார் மிஸ்பயி சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர், உப செயலாளர், முச்சபை தலைவர், செயலாளர் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.