அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் மடியில் கொரோனா நோய் தொற்று சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது கொரோனா நோயாயர்கள் ஆரம்ப கட்டப் பரிசேதனைக்காக சேர்த்துக் கொள்ளப்படுவர் எனவும், இவர்களது நோய் உறுதி செய்யப்பட்டால் இரண்டாம் மாடியில் இவர்களுக்கான தனி அலகில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று இல்லையெனின் சாதாரன சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அத்துடன் ஆபத்ததான நிலையில் அனுமதிக்கப்படும் கொரோனா சந்தேக நபர்கள் ஆரம்ப பரிசோதனையின்பின் இரண்டாம் மாடியில் உள்ள விசேட பிரிவுக்கு அனுப்பப்படுவர். தேவையேற்படின் முதலாம் மாடியின் நடுப்பகுதியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட 5 கட்டில்கள் கொண்ட ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்படுவர் எனவும் இன்னும் இப்பிரிவில் சத்திர சிகச்சைக் கூடம், பிரசவ அறை, முழந்தை நலப் பிரிவு போன்ற அலகுகளும் விசேடமாக இப்பிரிவிறகுள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், நுண்ணுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகி, மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.