ஐக்கிய ராஜ்யத்திலிருந்து பஹ்மி முகம்மடின் உள்ளப்பதிவுகள்...


முஸ்லீம் நபரின் ஐனாஷா அடக்கப்பட்ட. விடயம் தொடர்பில் விளம்பரத்திற்காக ஒருசாரார் அலிசப்ரியையும், அத்தாவுள்ளாவையும் ?
மறுசாரார் ஹகீமையும், றிசாத்தையும் விமர்சித்து முகநூலில் முகமூடி வீரனாக வருவது காணக்கூடியதாக உள்ளது.
இதையும் தாண்டி ஒருசாரார் ஐநாடுகள் சட்டம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டும் வீரமுழக்கம் இடுகின்றனர்.
ஒரு முஸ்லீம் மரணமடைந்தால், அவரின் நல்லடக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொரோனா ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் முஸ்லீம்கள் உற்பட மரணம் எதிர்பார்க்கப்பட்டதே.
ஆகவே இது தொடர்பில் பொறுப்பாக நடக்க வேண்டியதும், கண்கானிப்பில் இருக்க வேண்டியதும் உலமா சபையும், நாம் ஒவ்வொருவரும் தான்.
இன்று முகநூலிலும், வாட்சாப்பிலும் முதலைக்கண்ணீர் வடிக்கும் மகாவீரப் புருஷர்களே?
சகோதர்ர் மரணமடைந்து உடல் தகனம் செய்யப்படும் வரையான நேர இடைவெளியில்
1-உங்களால் அரசாங்கத்திற்கு / உரிய அமைச்சருக்கு அனுப்பிய தகவல்களை பகிரங்கமாக வெளியிட முடியுமா?
2-குறித்த நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய சுகாதார பொதுப்பணிப்பாளரை அல்லது அவரது செயலாளரை தொடர்பு கொண்ட ஆதாரத்தை வெளியிட முடியுமா?
3-குறைந்த பட்சம் உலமாசபையை தொடர்பு கொண்டு இது தொடர்பில் அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தியதை ஆதாரமாக வெளியிட முடியுமா?
4-எதுவும் வேண்டாம், மரணம் இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது.அதன்பின்னர் அடக்கும் வரை முகநூல் அல்லது வாட்சப்பில் இந்த ஐனாஷா அடக்கம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்திய பதிவுகளை வெளியிட முடியுமா?
5-ஐனாஷா வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலைக்கு உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சலுகைகளை பயன்படுத்தி சமூகமளித்த படங்களை வெளியிட முடியுமா?
6-ஐனாஷா இருந்த நேரத்தில் அவரின் குடும்பத்தாரை அல்லது அவரின் பள்ளிவாசல் நிர்வாகத்தையாவது தொடர்பு கொண்ட ஆதாரத்தை வெளியிட முடியுமா?
7-இந்த ஐனாஷா அடக்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் உயர்மட்ட கூட்டம் நேற்று இடம் பெற்றது. இதில் நேரடியாக அல்லது மறைமுகமாக உங்களால் இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க ஏதாவது வாய்திறந்த ஆதாரம் உண்டா?
கேவலமாக மக்களை அரசியல் சாயம் பூசி இனவாத உணர்ச்சிகளில் கோமா நிலையில் வைத்திருக்க வேண்டாம்.

இந்த சமூகம் ஏற்கனவே பல கோணங்களில் சிதறடிக்கப்கட்டு , எதிர்காலம் பற்றிய கேள்விக் குறியோடு வாழ்கிறது.
அந்நிய சமூகம் பிறப்பு முதல் இறப்பு வரை மார்க்கத்தில் நினைத்தவாறு கையாடுகிறது.
படித்த மற்றும் அரசியல்தலமைகள் எனக் கூறும் நாங்கள் சகலவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்தில் பேசி கண்ணாடிக் கூண்டில் சுகபோகம் அனுபவிக்கிறோம்.
இந்த மரணம் தொடர்பில் இறுதி நேரம் வரை பல கோணங்களில் , பலருடன் இணைந்து தொடர்ச்சியாக என்னால் இயலுமானவரை செயலாற்றினேன். இதனால் இது தொடர்பில் இன்று முகநூல் மற்றும் ஊடகங்களில் முதலைக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு காரசாரமான பதில்கள் உண்டு.
இருந்தும் தற்போதைய அசாதாரண சூழலில் சிலவிடயங்களை தவிர்ப்பது சிறந்தது என்பதால் விபரமாக எழுதவில்லை.

ஊரடங்குச் சட்ட வேளையில் வீட்டில் புரியாணி சாப்பிட்டு தூங்கிய பலருக்கு, காலைவரை அவரது ஐனாசாவிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
ஆகவே முகநூளில் / வாட்சாப்பில் முதலைக் கண்ணீர் விடுபவர்கள் என்னிடம் 00447870763570 மூலம் தொடர்பு கொண்டால் சில உண்மைத் தகவல்களை தரமுடியும். அதையும் சேர்த்து சிறப்பாக சமூகத்தை தாலாட்டலாம்.
நாம் இந்த ஐனாஷா விடயத்தில் ஒவ்வொருவரும் கவனக்குறைவாக இருந்து விட்டோம். ஆகவே முஸ்லீமாகிய நாம் இதற்கு அல்லாஹ்விடம் பொறுப்புதாரிகள். ஆதலால் எமது மார்க்க மற்றும் பாதுகாப்பு விடயத்தில் நமக்குள் ஒரு தெளிவு வரவேண்டியதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -