க.கிஷாந்தன்-
களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரத்தின் ஊடாக பயணித்த வேளையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் அம்பலமாகியுள்ளது.
இருவரும் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், மாட்டின் காலொன்றில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.