கொரோனா வைரஸ் குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்-விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர்


பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் சுகாதார துறையினர் ,அதிகாரிகள் பாடுபட்டு வருகின்றனர் என கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

நாட்டில தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றமை தொடர்பாக சனிக்கிழமை(4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

இந்த நாட்டிலே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் பொறுப்புள்ள பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலை பயன்படுத்தி தொற்று நோய் குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் தயவுசெய்து நான் மதத் தலைவர் என்ற வகையில் கூறிக்கொள்வதில் இவ்வாறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு மக்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஒவ்வொருவரும் பொறுப்புவாய்ந்தவர்கள் என்ற ரீதியில் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் தயவுசெய்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்புவது நான் அசாதாரண சூழ்நிலை கொண்டு எடுத்துக் கொண்டு வரும்.

மேலும் அனைவரும் ஜனாதிபதியின் ஊடக துறை வழங்கும் செய்தியை மாத்திரம் ஏன் நம்ப வேண்டும்.பலர் இன்று மக்களை குழப்புவதற்காக பல்வேறு விடயங்களை பரப்பி வருகின்றனர் நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மாத்திரம் நம்பவேண்டும் இதன் மூலம் அரசாங்கம் சுகாதாரத்துறையினர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.வைத்தியர்கள் ஊழியர்கள் பொது சுகாதார உத்தியோகததர்கள் அவர்கள் தங்கள் உயிரை பார்க்காமல் துச்சமாக நினைத்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான விடயங்களை உடனுக்குடன் 24 மணித்தியாலமும் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

விசேடமாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் இளைஞர்கள் வெளியில் வந்து குழப்பமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் தயவுசெய்து நாம் அனைவரும் அமைதியாக இருந்து உயிரை பாதுகாக்க வேண்டும் இதற்கு பாதுகாப்பு படையினருக்கு நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வலிகள் தரும் குழப்பமான செயல்களை செய்து வந்தால் உயிரை காப்பாற்ற முடியாது காரணம் உயிர்கள் செயல்களால் பெறுமதிமிக்க உங்கள் உயிர்கள் பலியாகும். தற்போது பாடசாலை கூட மூடப்பட்டு கல்வியியல் வீழ்ச்சியடைந்துள்ளது.நமது கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால் இந்த நோயை கட்டுப்படுத்தி நாம் மீண்டு வர முடியும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரை துச்சமாக நினைத்து உண்மையான செய்திகளை அரசை ஊடகங்களிலும் தனியாருடன் கவலை தெரிவித்துவருகின்றனர்.இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா எனும் கொடிய அரக்கனை எமது நாட்டிலிருந்து இல்லாமல் செய்வோம்.கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் இருக்கின்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் உடனே நம் மக்களுக்கு சலுகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

நீங்கள் பிராந்தியத்தில் எடுத்த முடிவு ஜனாதிபதியின் ஊடகத்தின் ஊடாக வெளியிடப்பட்டதாக என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.எமது கல்முனை பிரதேசத்தில் மக்களுக்கு எந்தவித அசௌகரியங்களை ஏற்படாத வகையில் அரச படை வீரர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.ஊரடங்கு சட்ட காலத்தில் வீட்டில் இருக்கும் போதும் மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்துக் கொண்டு செல்ல ஏதுவான வழிமுறைகளை செய்து கொடுக்க அந்த கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள மாணவர் சபையினர் மற்றும் ஏனைய துறையினர் முன்வர வேண்டும்.

கடந்த காலங்களில் கல்முனைப் பிராந்தியத்தில் பாரியதொரு பிரச்சினையாக இருந்த கல்முனை வடக்கு பிரதேச முதலமைச்சர் சம்பந்தமாக உன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோம் ஒரு வருட காலம் ஒரே நிலையில் இதுவரை தீர்வு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.உண்ணாவிரதம் நிறைவடைந்து நான் விகாரைக்கு வரும்போதும் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் பல உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வந்து வாக்குறுதிகளை தந்துவிட்டுப் போன அந்த வாக்குறுதிகள் பொய்யாகவே இருக்கின்றது. இன்றுவரை அந்த வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது எம்மை ஏமாற்றும் செயலாக இருக்கின்றது.

அதேபோன்றுதான் சாய்ந்தமருது நகர சபை பிரச்சனை வழங்கப்பட்டு மூன்றும் தடுத்து நிறுத்தப்பட்டது மக்களுக்கு அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.இந்த உண்ணாவிரதத்தில் சாகர் எனது உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்தவன். அந்த வகையில் நிச்சயம் அந்த எனது உயிருள்ள வரை அதற்காக போராடுவேன்.இன மத கட்சி பேதமின்றி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒரு மதத்திற்கு மட்டுமான நோய் அல்ல என்பதை உணரவேண்டும்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர கால சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியமில்லை ஜனாதிபதியிடம் அதிகாரம் உள்ளது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு நன்மை தரக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதனால் யாராவது ஒருவருக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு மீண்டும் பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -